இஸ்ரோ நிலவின் தென்துருவ  பகுதி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் மூன்று விண்கலத்தை வடிவமவைத்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. மேலும் சந்திராயன் மூன்று விண்கலத்தில் உள்ள லாண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் நிலவை அடைய 40 நாட்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை 6 4 மணிக்கு சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக நிறைவில் தரை இறங்கியது.

சந்திராயன் மூன்று விண்கலத்தில் உள்ள லாண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்தது. இது 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது. இதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டின் ஐபா youtube சேனல் நேரலை 34 லட்சம் பேர் பார்த்தனர். அதுதான் உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது சந்திராயன் மூன்று திட்டத்தின் நேரலை அதற்கு அதிகமான பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளது.