நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் வாங்குவதற்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதிகள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மத்திய அமைச்சகத்தின் மூலம் வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் பண வீக்கம் மற்றும் விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் தொகையை அதிகரிப்பதற்கு நாடு முழுவதும் பல தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு இதற்கு முன்னதாக விவசாயிகளுக்கு  50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.