சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளுடைய தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்து செய்ய வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிட்டது. மேலும் இதனை மீறினால் மருத்துவர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து மருத்துவர்கள், சங்கங்களின் நிர்வாகிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியாவை சந்தித்து இந்த நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று விதிமுறை அமலாக்கத்தை நிறுத்தி வைக்கும் அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.