ஒவ்வொரு வங்கியிலுமே வாடிக்கையாளர்கள் கேஒய்சி பார்ப்பது கட்டாயம். அந்த வகையில் bank of baroda வங்கியில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி சரிபார்க்கும் முறையை எளிதாக்கும் விதமாக புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வங்கிகளுக்கு நேரடியாக சென்று இதனை முடிக்கும்படியாக இருந்த நிலையானது தற்போது வீடியோ கால் மூலமாக கேஒய்சி சரி பார்க்க முடியும் என்ற சேவை பேங்க் ஆப் பரோடா வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையானது வங்கி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வீடியோ கால் மூலமாக சரிபார்ப்பு செய்யப்படும். இந்த சேவை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பேங்க் ஆப் பரோடா இணையதளம் அல்லது செயலியில் வீடியோ RE-KYC என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய கணக்கு எண் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு வீடியோ கால் மூலமாகவே கேஒய்சி சரிபார்க்கப்படும். இந்த புதிய செயல்முறை வங்கி வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது