இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புதிய ஆள்சேர்ப்பு ஆணையத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று அம் மாநில முதல்வர் தெரிவித்தார். அதாவது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படியான ஆள் சேர்க்கும் செயல்முறை நடைபெறும் எனவும் உறுதி அளித்திருக்கிறார். மேலும் எந்தவித ஊழலும் இல்லாமல் தகுதி உள்ள இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தை கலைப்பதற்காக சூழ்ச்சி வேலைபாடு நடைபெற்று வந்தாலும் புதிய கமிஷனர் தகுதி அடிப்படையில் மட்டுமே வேலைக்கு நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் புதிய ஆள்சேர்ப்பு ஆணையத்திற்கான வேலைபாடுகள் திட்டம் குறித்து தகவல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.