உலக மனநல தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உலகம் முழுவதும் மனநல தினம் அனுசரிக்கப்படுகின்றது. முதல்முறையாக உலக மனநல தினம் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இது 150-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகளாவிய அமைப்பான மனநலத்திற்கான உலக கூட்டமைப்பின் ஒரு முயற்சி ஆகும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முதன்மை நோக்கமாகும். 1994 ஆம் ஆண்டு உலக மனநல தினம் உலகம் முழுவதும் மனநல சுகாதார சேவைகளின் தளத்தை மேம்படுத்துதல் என்ற ஒரு கருப்பொருளுடன் முதல் முறையாக கொண்டாடப்பட்டது. இந்த நாள் மனநல பிரச்சனைகளில் பணியாற்றும் அனைவருக்கும் தங்கள் வேலையை பற்றி பேசுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மனிதன் நல்ல மனநலத்துடன் இருந்தால்தான் அவன் செய்யும் செயல் திறன் பெற்றதாக இருக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இயலாமைக்கான முக்கிய காரணங்களில் மனசோர்வும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களிடையே தற்கொலை என்பது மரணத்திற்கான நான்காவது முக்கிய காரணமாகும். மனநலம் மேம்படுத்துவது தற்கொலைகளை பெரிதளவில் குறைகின்றது.