தனிப்பட்ட நபரின் மனநலம் சமூகத்தையும் தேசத்தையும் ஆரோக்கியமாக உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவருக்கு நல்ல சமநிலையான வாழ்க்கையை அடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் அவசியமாகும். மனநல ஆரோக்கியத்தை எடுத்துரைக்கும் விதமாக உலக மனநிலை தினம் அக்டோபர் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கமே ஒருவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதற்கும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் சுற்றி இருப்பவர்களும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான்.

டீன் ஏஜ் வயது பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை
  • உடல் மொழி
  • சீரான உணவுப்பழக்கம்
  • திறமையான கேட்டறியும் திறன்
  • சரியான உந்துதல்
  • நல்ல நண்பர்கள்
  • ஆரோக்கியமான திரை நேரம்
  • கல்வியில் ஈடுபாடு

இவை எல்லாம் ஆரோக்கியமானவை.

அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்

  • நடத்தை மாற்றங்கள்​
  • குழந்தை தனித்து இருப்பது
  • சோகமாக இருப்பது
  • கவலையாக இருப்பது
  • தனிமையை விரும்புவது
  • எதிர்வினையாற்றுவது
  • அதிகப்படியான சாதன பயன்பாடு
  • உடலில் மாற்றம்
  • குணம் மற்றும் பதிலளிக்கும் விதத்தில் மாறுபாடு
  • கவனச்சிதறல்
  • மோசமான மதிப்பெண்
  • பிற கவலை அடிப்படை சிக்கல்கள்
  • பதட்டத்துடன் இருப்பது
  • பயம்​

இவையெல்லாம் மனநோய் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். இதையெல்லாம் அலட்சியப்படுத்தக்கூடாது.