மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய வீரர் ருத்ராஷ் பட்டீல் 263.3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்த போட்டியில் சீன வீரர் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதன் பிறகு சீனாவை சேர்ந்த டூ லின்சூ 263.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.