தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 2,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளராகவும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கட்டுநராகவும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறாது, நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு துறையின் ஆள்சேர்ப்பு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 7, 2024. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது: விற்பனையாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150, கட்டுநருக்கான கட்டணம் ரூ.100.

இந்த வேலைவாய்ப்புகளுக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதலாமாண்டில் கான்சாலிடேட் செய்யப்பட்ட ஊதியம் பெறுவார்கள்.அதன்பின் அவர்களின் ஊதியம் வாரிய சீர்திருத்தம் அடிப்படையில் அதிகரிக்கப்படும்.