உத்தரபிரதேச மாநிலம் சம்பலில், இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் மாஹக் மற்றும் பரி (மெஹ்ருல் நிசா) ஆகிய இருவரும் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் அசிங்கமான உள்ளடக்கம் உருவாக்கி பரப்பியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய ஹினா மற்றும் ஜரார் ஆலம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் சமூக ஊடகங்களில் தவறான, அசிங்கமான  மற்றும் அவமதிக்கும் வகை உள்ளடக்கங்களை உருவாக்கி, அதை பரப்பி வருவதாகவும், இதன் மூலம் மாதம் ரூ.25,000 முதல் 30,000 வரையிலான வருமானம் ஈட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தி வெளியிட்டதின்படி, “mehekaurpari143” எனும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து குற்றவாளிகள் இந்த செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவம் குறித்து புகார் வந்ததும், போலீசார் அந்த கணக்கை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, BNS சட்டத்தின் 296ம் பிரிவும், தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 66 படியுமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேலும் 2 ஐபோன்கள் மற்றும் 4 ஸ்மார்ட்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த மொபைல் சாதனங்கள் தவறான காணொளிகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தற்போது அவர்களது இன்ஸ்டாகிராம் கணக்கு தடைசெய்யப்பட்டாலும், அந்தக் காணொளிகள் பிற கணக்குகளின் வாயிலாக பரவுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த இன்ப்ளூயன்சர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, அவர்கள் போலீஸ் அலுவலகத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ‘வாய்சுழி’, ‘பீஸ் சைன்’ போஸ் என மன்னிப்பு கோராத போக்கில் நடந்துகொண்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் மாஹக் ஒருவரிடம் ஒரு கண் ஒட்டியபடி சிரித்துக்கொண்டே ‘கூல்’ போஸ்கள் கொடுத்தபோது, மற்றொரு பெண் சிரித்துக் கொண்டிருந்தார்.

இது பொதுமக்களிளிடையே மிகுந்த கோபத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் “தண்டனை பயமே இல்லையா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் ஏராளமான பின்தொடர்பவர்களை ஈர்க்கும் நோக்கில் தவறான வழியில் பிரபலமாவதற்காக இவர்கள் மேற்கொண்ட இந்த செயல்கள், இளைஞர்களுக்குக் கொடுமையான முன்னுதாரணமாக இருப்பதாகவும், இவைகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலியுறுத்தப்படுகிறது.