இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பெண் ஓட்டுநரின் திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இரு வாகனங்களுக்கு இடையில் இறுக்கமாக நின்ற தனது காரை, சிறிய இடைவெளிக்குள்ளேயே முன்னும் பின்னுமாக மிகத் துல்லியமாக இயக்கி வெளியேற்றும் அந்த பெண்ணின் செயல் அனைவரையும் அசரவைக்கும் வகையில் உள்ளது.

இந்த காட்சி “நான் வேலையில் இருந்தபோது, இந்தப் பெண் சாத்தியமற்ற ஒரு இறுக்கமான இடத்திலிருந்து வெற்றிகரமாக காரை இயக்கி வெளியேறினார்” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டு வைரலாகியுள்ளது. இந்த வீடியோவுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். “பெண்களால் எல்லாம் செய்ய முடியும்”, “அவர், ‘பெண்கள் வாகனம் ஓட்ட முடியாது’ என்ற பழைய கருத்தை முறியடித்துள்ளார்” என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Pubity (@pubity)

பிரபலமான ஹாட் வீல்ஸ் நிறுவனம்கூட, “அவர் எல்லா இடங்களுக்கும் செல்கிறார்” என உற்சாகமாகக் கருத்து தெரிவித்துள்ளது. பபிட்டி என்ற ஊடக நிறுவனம் இந்த வீடியோவை மீண்டும் வெளியிட்டதிலிருந்து, 24 மணி நேரத்திலேயே 6 லட்சம் பார்வைகள் மற்றும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. இந்த வீடியோ நடைபெற்ற இடம் தெரியாதிருந்தாலும், பெண் ஓட்டுநரின் செயல்பாடு அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.