வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது..

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1  என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து ஐந்து போட்டிகள்  கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்தநிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – இந்திய அணி இன்று இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கி ஆடி வருகின்றனர்..

இந்தியா லெவன் :

சுப்மன் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(வி.கீ), ஹர்திக் பாண்டியா(கே), அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ் லெவன் :

கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (வி.கீ), ரோவ்மன் பவல் (கே), சிம்ரன் ஹெட்மயர், ஆர் சேஸ், ஜேசன் ஹோல்டர், ஆர் ஷெப்பர்ட், ஏ ஹோசைன், அல்சாரி ஜோசப்.