பாலஸ்தீனத்தை காங்கிரஸ் ஆதரிப்பதை பிஜேபி பயங்கரவாததிற்கு  காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக சொல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,

குண்டு வீசுவது பயங்கரவாதம் இல்லையா? இன்னொருவருடைய மண்ணை கைப்பற்றி கொள்ளுவது பயங்கரவாதம் இல்லையா? வெள்ளை அமில குண்டுகளை வீசுகிறார்களே, அது மனிதாவிமான தன்மையா? மோடியினுடைய பாரதிய ஜனதா அலுவலகத்தை யாராவது கைப்பற்றி கொண்டால், அவர்கள் அமைதியாக இருப்பார்களா ? அவர்களுடைய தாய் மண் இல்லையா அது… எதற்காக அதை கைப்பற்ற வேண்டும்?

எதற்காக அவர்களை அழிக்க வேண்டும்? இஸ்ரேல் மக்களுக்கு ஒரு இடம் தேவை என்றால்,  சமாதானத்தின் மூலமாக பெறலாம். இதை போன்ற ஒரு சண்டையின் மூலமாக பெறுவதை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது. மனிதாபிமானம் உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதியாக நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஆதரிச்சாலும்,  பாஜக எதிர்த்து வருகின்றது. இது நாடாளுமன்ற தேர்தல்ல செல்வாக்கை உயர்த்துமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி,

நாங்கள் கொள்கை ரீதியாக சாதிவாரி கணக்கெடுப்பை வேண்டுகிறோம்.  இன்றைக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால் ? பீகார்ல ஒரு மாடல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள். ஓபிசி என்று சொல்லக்கூடிய இதர பிற்படுத்தபட்ட மக்கள் 65ல் இருந்து 70 சதவீகிதம் வாழ்கிறார்கள். ஆனால் நாம் ஓபிசி க்கு கொடுக்கிற இட ஒதுக்கீடு 27% தான்.

இந்த 27%  தோராயமாக அன்றைக்கு மண்டல அறிக்கையை வைத்து முடிவு செய்யப்பட்டது. ஒரு துல்லியமான கணக்கீடு இருந்தால் தான்,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய பங்கு போய் சேரும். நாம் எதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்று  அரசு விரும்பினால், அதற்கான கணக்கெடுப்பு தேவை. கணக்கெடுப்பு இல்லாமல் எப்படி தர முடியும்?

உதாரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறவர்கள் என்ற கணக்கெடுப்பு எடுத்தால் தான், அந்த மக்களுக்கான திட்டங்களை…  அந்த திட்டங்களுடைய பயன்களை கொண்டு சேர்க்க முடியும். எனவே தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று காங்கிரஸ் கருதுகிறது.  தலைவர் ராகுல்காந்தி கேக்கிறார். இந்தியாவிலே அதற்கான முதல் கருத்தரங்கத்தை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தியது,  அது எங்களுக்கான பெருமை என தெரிவித்தார்.