ஐ.சி.சி சாம்பியன்ஸ் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் போட்டியிட உள்ளன. ஐசிசி யின் 9ஆவது சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால். இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் துபாயில் நடைபெறும்.

இந்தப் போட்டியில் “ஏ” பிரிவில் இருக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தை பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வங்காள தேசத்துடனும், பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், மார்ச் மாதம் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணியுடனும் மோத உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகளின் காரணமாக நேரடி போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஐ.சி.சி மற்றும் ஆசிய கோப்பை தொடரில் மட்டும் விளையாடுகின்றன. இதனால் இந்தியா- பாகிஸ்தான் அணி ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகளில் போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் ஒவ்வொரு அணி வீரர்களின் ஜெர்சியிலும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெறாது என பி.சி.சி.ஐ  தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. துபாயில் மாற்றப்பட்டு ஆடப்படும் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிடவில்லை என்பது முக்கியமானதாகும்.