தமிழக அரசு கடந்த 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்தது. இதில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.
வழக்கமாக விருது கிடைத்தால் நன்றி சொல்லும் இயக்குநர்களுக்கு மத்தியில், கோபி நயினார் அரசை நேரடியாக விமர்சித்துள்ளார்.
“ஒருவேளை எனக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது வழங்கப்பட்டிருந்தால், என் மீதே எனக்கு சந்தேகம் வந்திருக்கும்” என அதிரடியாகத் தொடங்கியுள்ளார்.
“அரசு தன் உரிமைகளுக்காகப் போராடும் மக்களை இரண்டாகப் பிரிக்கும். சமரசமாகப் போகிறவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து மகிழ்விக்கும்; போராடுபவர்களை எதிரிகளாகச் சித்தரிக்கும். இதுதான் இப்போது தமிழ்நாட்டிலும் நடக்கிறது” எனச் சாடியுள்ளார்.
இயக்கநர் கோபி நயினார் இப்படிப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ‘அறம்’ படத்திற்காக திராவிடர் கழகம் வழங்கிய ‘பெரியார் விருதை’ அவர் திடீரெனத் திருப்பி அளிப்பதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் தன்னைச் சமூக விரோதியாகச் சித்தரிப்பதாகக் கூறி அந்த முடிவை எடுத்திருந்தார்.
