கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஜோசப் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி என்ற மனைவியும், ஆரோக்கிய ரோஸி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு ஜோசப் பூண்டி கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஜோசப்பை தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஜோசப்பின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.