கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஆண் காட்டு யானை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை கொய்யா மரங்களை முறித்து கொய்யா பழங்களை பறித்து தின்றது.

இதனையடுத்து அந்த யானை தொழிலாளர்களின் வீட்டுத்தோட்டத்தில் இருந்த பலாமரம், கொய்யா மரங்களில் பழங்களை பறித்து தின்று அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்களும் பெண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.