கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. நேற்று கொச்சி பகுதியை சேர்ந்த அஜிஸ் டேனியல் என்பவர் வால்பாறையில் டைல்ஸ் ஒட்டும் வேலையை முடித்துவிட்டு நண்பர்கள் 3 பேருடன் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் சித்தர் பாலம் அருகே சென்ற போது சுள்ளி கொம்பன் காரை நிறுத்தி கண்ணாடி உடைத்து சேதப்படுத்தியுள்ளது. சிறிது நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்றதால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனவே யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.