கர்நாடக மாநிலம் ஹாவேரி அருகே சிக்கரூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாதிக் என்பவருக்கும், சல்மா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இதில் திருமணத்திற்கு முன்பு ஜாபர் என்பவரை சல்மா காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பின்பும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அதோடு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக்காதல் குறித்து சாதிக்கிற்கு தெரிய வந்ததும் சல்மாவை அவர் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் ஜாபருடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இது தொடர்பாக சல்மா, சாதிக்கிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சல்மா கோபமடைந்து உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். ஆகவே தனது கள்ளக்காதலன் ஜாபரிடம் இது பற்றி கூறினார்.

அதன்படி சல்மா மற்றும் ஜாபர் சேர்ந்து சாதிக்கின் கழுத்தை நெரித்து மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதில் சாதிக் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். அதனையடுத்து உடலை குளியல் அறைக்கு இழுத்துச் சென்று ரத்த கரைகளை அகற்றி அக்கம் பக்கத்தினரிடம் சாதிக் குளித்துக் கொண்டிருக்கும் போது வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டார் என்று கூறி சல்மா நாடகமாடியுள்ளார். இதில் உண்மை தெரியாத குடும்பத்தினர் சாதிக்கின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து புதைத்துள்ளனர்.

இருப்பினும் சாதிக்கின் சகோதரருக்கு சல்மாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் தனது சகோதரன் குளியல் அறையில் வழுக்கி  விழுந்து உயிரிழக்க வில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சல்மாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் அவர் மீது சந்தேகம் அதிகமானது.

ஆகவே  அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சாதிக்கை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாதிக்கை கள்ளக்காதலன் ஜாபருடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறினார். பின்னர் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.