ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் மேத்தா என்பவருக்கும், பிரியங்கா தேவி (25) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், ரஞ்சித்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையூறாக இருந்த மனைவியைக் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி கள்ளக்காதலியின் உதவியுடன் ரஞ்சித் கொலை செய்துள்ளார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட அவர், தனது கள்ளக்காதலியின் ஊருக்கு அருகிலேயே மனைவியின் உடலைப் புதைத்துள்ளார்.
மனைவியைப் புதைத்த அதே இடத்தில், ஒரு நாயையும் கொன்று ரஞ்சித் புதைத்துள்ளார். ஒருவேளை அந்த இடத்தில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசினால், மக்கள் நாய் செத்துக்கிடப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது மெகா பிளான்.
ஆனால், பிரியங்கா காணாமல் போனதில் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் அந்த இடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு 5 அடி ஆழத்திற்குத் தோண்டியபோது, நாயின் சடலத்திற்குக் கீழே பிரியங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள ரஞ்சித் மற்றும் அவரது கள்ளக்காதலியைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
