தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்த ஸ்ருதி ராஜுக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கம் வந்தார். தமிழில் ஆபீஸ் மற்றும் தென்றல் போன்ற ஹிட்சீரியல்களில் நடித்துள்ள ஸ்ருதிராஜ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிக்கு  42 வயதாகியும் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதாவது இதுவரை எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்தது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அந்த விஷயம் சரிவர நடக்காது. இதனால்தான் இதுவரை திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. மேலும் என் திருமணத்தை பற்றி என் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.