அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி தாங்கள் மிரட்டப்படுகின்றோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கௌதம் அதானி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது. அதன் எதிரொளியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அதானி விவகாரம் எதிரொலித்தது.

நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொழிலதிபர் அதானின் சொத்துக்கள் வான் அளவிலான அதிகரிப்புக்கு மோடி அரசே காரணம் என்ற பொருளில் குற்றம் சாட்டினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில் அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவோ மறைப்பதற்கோ எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற தங்களது கோரிக்கையில் இருந்து மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் பின்னர் ஏன் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் எனவும் ஜெயராம் ரமேஷ் வினைவியுள்ளார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய கேள்விகளை நீங்கி இருப்பதை சுட்டி காட்டியவர் நாங்கள் அமைதியாக இருக்கும்படி மிரட்டப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.