
இனம், ஜாதி, வயது, மொழி என அனைத்து வேதங்களையும் கடந்தது தான் காதல். காதல் ஒரு மனிதனை சாதனையாளராக மாற்றியதும் உண்டு. சாக தூண்டியதும் உண்டு. வருடம் முழுவதும் காதல் செய்தாலும் காதலை கொண்டாடுவதற்காகவும் ஒரு நாளை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா? புறக்கணிக்கப்பட வேண்டுமா? நமது கலாச்சாரத்திற்கு உகந்ததா? போன்ற பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஏன் பிப்ரவரி 14-ம் தேதியை காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள் என்பதை குறித்து நாம் இந்த பதிவில் காண்போம். ரோமானிய அரசனான கிளாடிஸ் மிமி ஆட்சியின்போது பல்வேறு முட்டாள்தனமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதன் காரணமாக இளைஞர்கள் படையில் சேர தயங்கி உள்ளனர். இந்நிலையில் திடீரென ஒரு நாள் ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனை மீறினால் கைது செய்யப்பட்டு இருட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன் பின் பொது இடங்களில் அவர்களுக்கு கல்லால், அடித்தும் தலை துண்டித்தும் கொல்லப்படுவார்கள் என உத்தரவிட்டுள்ளார். மனைவி மற்றும் காதல் இல்லாவிட்டால் நிறைய பேர் படையில் சேர்வார்கள் என அந்த அரசன் நம்பி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் ரோமானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது பாதிரியாராக இருந்த வாலண்டைன் என்பவர் அரசின் அறிவிப்பை மீறி மக்களுக்கு ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட மன்னர் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
இதனையடுத்து மரண தண்டனை நிறைவேற்றிக் கொள்ளும் நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த வாலன்டைனுக்கும், சிறை காவலர் தலைவரின் பார்வையில்லாத மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போது வாலன்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயற்சி செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட சிறை தலைவன் தன்னுடைய மகளை வீட்டு சிறையில் வைத்துள்ளார். ஆனால் காவல்களை மீறியும் வாலண்டைன் சிறை தலைவன் மகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதன்பின் வாலண்டைன் கொல்லப்பட்டார். அவர் இறந்த தினம் பிப்ரவரி 14-ம் தேதி அதன் பின் ரோமானிய தேவாலயங்கள் ஐரோப்பியர் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது பிப்ரவரி 14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு பின் தற்போது போப் ஆண்டவர் வாலண்டனை புனிதராக அறிவித்துள்ளார். அப்போதிலிருந்து பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்திற்கு வாழ்த்து அட்டைகளை அனுப்புவார்கள். தற்போது செல்போன் வருகைக்குப்பின் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைத்து விட்டது. whatsapp, twitter, facebook போன்றவற்றில் காதலையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வகைவகையான டிசைன்களில் வாழ்த்துகள் உருவாக்கப்பட்டு செல்போன் மூலமாக நொடிப் பொழுதில் வாழ்த்துக்களை அனுப்பி விடுகின்றனர்.