மதுரையில் உள்ள திருமலை நாயக்கரின் மகாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 440-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் கடம்பூர் ராஜு போன்றோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவில் அப்படி அறிவிக்கப்படவில்லை. கலைஞரின் பேனா நினைவு சின்னத்திற்கு சீமான் போன்றோர் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அதை அமைப்பதில் பலருக்கும் உடன்பாடு இல்லை என்பதால் அதை மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும்.

அதன் பிறகு செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அவர் அதிமுகவில் இருக்கும் போதும் கூவினார். தற்போது திமுகவில் இருக்கும் போதும் கூவுகிறார். அவர் பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். அவரை அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். திமுக குடும்பத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி. அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி என்று கூறினார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய மாற்றத்தை கொடுப்பார் என்றும் திமுக பொய்யான பிரச்சாரங்களை கூறிவரும் நிலையில் அவர்களுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.