சிவராத்திரி என்பது சிவனுக்கு நடத்தப்படும் சாதாரணமான விழா அல்ல. இது மனதையும் புத்தியையும் கட்டுப்படுத்தக்கூடிய மகாவிரதமாகும். சிவராத்திரி என்றால் பட்டினியாக இருப்பது கண் விழித்து தூங்காமல் இருப்பது கோவிலுக்கு போவதுடன் மற்றும் நின்று விடுவதில்லை. இந்த விரதத்தினுடைய முழு பலனும் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இதன் தத்துவத்தை உணர்ந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டே தான் இருக்கும். அதனை ஒரு நிலைப்பட செய்வதற்கு தியானம் அவசியம்.

மேலும் அலைபாயும் மனதை சிவன் மீது வைத்து தியானம் மேற்கொண்டாலும் மனிதனின் மூளைக்குள் ஏதோ ஒரு இடத்தில் முந்தைய ஆசைகளின் எண்ணங்கள் சிறு வடிவம் புதைந்து கிடக்கத்தான் செய்யும். அதையும் ஒழித்தால் தான் நம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடைய முடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி ஆகும். இந்த தத்துவத்தை உணர்ந்துதான் சிவனை லிங்க வடிவில் முன்னோர்கள் படைத்துள்ளனர். சிவனின் லிங்க படம் ஏறத்தாழ ஒரு முட்டை வடிவம் ஆகும். இதற்கு அர்த்தம் முட்டையை சுற்றி சுற்றி பார்த்தாலும் அதற்கு முதலும் கிடையாது முடிவும் கிடையாது. அதேபோலத்தான் சிவபெருமானும். அவர் முதலும் முடிவும் இல்லாதவர். இப்போது சிவராத்திரி அன்று பாராயணம் செய்யக்கூடிய மந்திரங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

சிவ மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவா காயத்ரி மந்திரம் 1

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

சிவா காயத்ரி மந்திரம் 2
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!                                                                                                                          தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

பிரதோஷ மந்திரம்
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

தரித்திரம் நீக்கும் மந்திரம் :
ஓம் ருத்ராய ரோகநாஷாய

அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ

மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் :
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்