திரையுலகின் டாப் நட்சத்திரங்களான தளபதி விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நட்பு குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ‘லியோ’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களுக்குப் பிறகு இவர்களின் நெருக்கம் குறித்த வதந்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், விஜய்யின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
எக்ஸ் (X) தளத்தில் ரசிகர் ஒருவர், “ஏன் அவர்கள் நண்பர்களாக (Friend) கூட இருக்கலாமே?” என்று பதிவிட்ட கருத்தை ஆமோதித்து ஸ்ரீமன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கில்லி’ முதல் ‘கோட்’ வரை இணைந்து பணியாற்றி வரும் இவர்களது நீண்டகால நட்பைப் புரிந்துகொள்ளாமல் வெளியாகும் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஸ்ரீமனின் இந்த ரியாக்ஷன் பார்க்கப்படுகிறது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஆரோக்கியமான நட்பைப் போற்றும் வகையில் ஸ்ரீமன் அளித்துள்ள இந்த விளக்கம், குழப்பத்தில் இருந்த தளபதி ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
