டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை இரண்டு நாட்களில் ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைவர் ஹரிஷ் குரானா, “ஏன் 48 மணி நேரம் காத்திருக்க வேண்டும்? உடனே ராஜினாமா செய்யலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவிருந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தத் தேர்தல் நவம்பர் மாதமே நடத்தப்படலாம் என்று குறைப்படுகிறது. கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு ஆம் ஆத்மி தலைவரை முதலமைச்சராக நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பாஜக உடனே அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டி தானே என்று கேள்வி எழுப்பிய நிலையில் இது அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளது. அதோடு டெல்லியின் புதிய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய மனைவியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.