சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நாயின் வீடியோ வைரலாகி பலரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. அந்த வீடியோவில், நாய் ஒன்றின் தலையில் எதிர்பாராத விதமாக ஒரு பாத்திரம் சிக்கிக் கொள்கிறது.
கண் தெரியாமல் பதற்றமடைந்த அந்த நாய், அங்குமிங்கும் ஓடி அடுக்கடுக்கான சேதங்களை ஏற்படுத்துகிறது. முதலில் ஒரு பெரிய கண்ணாடி கதவின் மீது மோத, அந்த கதவு சுக்குநூறாக உடைகிறது. அடுத்த சில விநாடிகளில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டூ-வீலர் மீதும் மோதி அதைக் கீழே தள்ளுகிறது.
Dogesh bhai ko Lvl 5 Helmet mil gaya 😂🤣 pic.twitter.com/gsOJivyvrr
— Yash Tiwari (@DrYashTiwari) January 9, 2026
நெட்டிசன்கள் இந்த நாய்க்கு ‘டோகேஷ் பாய்’ (Dogesh Bhai) என்று பெயரிட்டு, “டோகேஷ் பாய்க்கு லெவல் 5 ஹெல்மெட் கிடைத்துவிட்டது” என மீம்ஸ்களைத் தட்டி விடுகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையைக் கேள்வி எழுப்புகின்றனர்.
வீடியோவில் உள்ள பைக் மற்றும் ஸ்கூட்டர் கலந்த உருவம், கண்ணாடி உடைந்தும் பின்னால் இருக்கும் போலீஸ்காரர் அசையாமல் இருப்பது போன்றவை இது ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று அவர்கள் வாதிடுகின்றனர். எது எப்படியோ, இந்த 11 விநாடி வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
