
பாஜக சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மாநிலத் தலைவரை தேசிய தலைமை மூலம் அறிவிக்கப்படும். முன்னதாக மத்திய மந்திரியில் எல். முருகன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை பாஜக நிர்வாகிகள் சிலர் மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர் என்றும் மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இது பாஜக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய, பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிசான் ரெட்டி வருகிற 17ம் தேதி சென்னை வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பாஜக தலைவர் பெயர் பட்டியலில் அண்ணாமலை,வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.