
மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இந்த இயக்கத்தை விட்டு போனவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் கூட்டம்… சென்னையில எம்ஜிஆர் நகரில் மீட்டிங்கில் பேசும் போது சொன்னேன்…இங்கிருந்து எல்லாம் ஒருத்தர் கட்சி தாவி இருந்தாரு. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த கட்சியை விட்டு விலைக்குப் போனவர்கள் யாரும், யாரும் விளங்கவில்லை.
வருங்காலத்திலும் விளங்கவும் மாட்டார்கள். காரணம் இது உண்மையான தொண்டர்களால் நிறைந்துள்ள இயக்கம். ஆட்சி அதிகாரம் பழனிச்சாமி கையில இருந்த போதும், ஆட்சி அதிகாரத்திற்காக…. ஏங்காதவர்களாய்… ஆட்சி அதிகாரத்தை, அதன் பலன்களை பெரிதாக நினைக்காதவர்கள் என்னோடு அணி திரண்ட தொண்டர்கள் கூட்டம். இவர்களுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் விளங்க மாட்டார்கள் என்று சொன்னேன்.
அப்பொழுது ஒரு பத்திரிக்கை, ஊடக நண்பர் என்னிடம்… ஏன் செந்தில் பாலாஜி அங்கே அமைச்சராகி விட்டார் என்றார் ? கொஞ்ச நாள் பொறுங்க.. செந்தில் பாலாஜி என்ன ஆவார் என்று சொன்னேன். நீங்க பார்த்து இருப்பீங்க தொலைக்காட்சியில்…. பாவம் இன்னைக்கு செந்தில் பாலாஜி அவசரப்பட்டார். இன்றைக்கு அல்லல்படுகிறார். அன்னைக்கு வேன்ல அமலாக்கத்துறை அழைச்சிட்டு போறப்ப நம்ம மனசு கஷ்டமா இருந்துச்சு. நம்ம கூட பயணித்தவர்… 2006ல நம்மளால தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை நான் சொல்லி காண்பிக்கவில்லை.
அந்த நேரத்துல கரூர் சின்னசாமி அண்ணனுக்கு அம்மா வந்து ஏதோ ஒரு காரணங்களால் வாய்ப்பு கொடுக்க விரும்பாத காரணத்தினால், வேறொருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று என்னிடம் பலமுறை அவர்கள்… அதை பார், யாரை போட வேண்டும் என்று கேட்டபோது… அங்கே கண்டுபிடிக்கப்பட்டவர் தான் அன்றைக்கு மாணவர் அணியின் மாவட்ட செயலாளராக இருந்த கரூர் பாலாஜி. அவர் கூட என் சொந்தக்காரர் கிடையாது, ஜாதிக்காரர் கிடையாது. அவர் என்ன ஜாதி என்று எனக்கு தெரியாது ? எல்லோருடனும் கேட்டேன் என தெரிவித்தார்.