ஜம்மு காஷ்மீரின் கெரன் என்ற பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு வந்த பெண்ணிற்கு whatsapp கால் வழியை நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரசவ வலியோடு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார். அவர் Eclampsia, Episiotomy என்ற சிக்கலான நிலையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மகப்பேறு மருத்துவம் பார்ப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லப்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும் அங்கு கடும் பனிப்பொழிவு காரணமாக விமான இயக்கத்துக்கான சூழல் இல்லை.

இதனால் கர்ப்பிணிக்கு உடனே பிரசவம் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்ததால், ஜம்மு காஷ்மீரின் துணை மாவட்டமான க்ரால்போராவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் கெரன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை whatsapp வழியாக அழைத்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க உரிய அறிவுறுத்தல்களை கூறியிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து 6 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது தாயும்-சேயும் நலமுடன் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.