பொருளாதார நெருக்கடிகள், நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் சமீப காலமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் மின்சார கார் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த நிறுவனம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.