கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை விட இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகமாக வழங்கப்படுகிறது. அதனால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பலரும் இந்த திட்டத்தில் சேர்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் பேர் கணக்கு தொடங்கி இருப்பதாக இந்திய அஞ்சல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஏழு வருடங்களில் மொத்தமாக 2.8 கோடி பேர் சேர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.6 சதவீதம் வழங்கப்படுகிறது.