பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மேகாலயாவில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். மேகாலயாவில் பா.ஜ.க ஆட்சியமைந்தால், 7வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்தி ஊழியர்களுக்கு உரியநேரத்தில் ஊதியம் வழங்கப்படுமென தன் அறிக்கையில் ஜே.பி.நட்டா வாக்குறுதி அளித்திருக்கிறார். அதோடு பெண் குழந்தைகளுக்கு கேஜி வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது.

மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் 100 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அக்கட்சியின் எம்பி டெரிக் ஓபிரையன் தெரிவித்துள்ளார். மகளிருக்கு மாதம் ரூ.1000, வேலை இல்லாத 21-40 வயது உடைய ஆண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதியில் அவர்கள் அறிவித்துள்ளனர்.