
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் இளைஞர் ஒருவரை, இருவர் சேர்ந்து பத்திரமாக தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனையின் பெட்டில் வைக்கிறார்கள். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருக்கிறார்.
होगा युद्ध तो उतरेंगे हम भी मैदान में
सीरियस बिमार हूं मरा थोड़ी हूं
😂👇 pic.twitter.com/TUP8geKQJj— Chitraahh Commentary (@BjpSpokeperson_) June 10, 2025
இதையடுத்து சிறிது நேரத்தில் அவரை சுற்றி ஒரு கும்பல் நிற்கின்றது. அதன் பிறகு கண்ணிமைக்கும் நொடியில், சிலர் இணைந்து ஒரு வாலிபரை தாக்குகின்றனர். இதனை பார்த்த நோயாளி பெட்டில் இருந்து எழுந்து அமர்ந்தார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவரும் எழுந்து அந்த நபரை சரமாரியாக தாக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.