
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பகுதியில் காந்தி பிஸ்வால் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர்கள் ஜவுளி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். காந்தியின் 85 வயதான தாய் 6 மாதங்களாக அவரோடு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் மகனும், மருமகளும் வேலைக்குச் செல்வதால் தாய் வீட்டின் சமையல் வேலைகளை பார்த்துள்ளார். உணவு விஷயத்தில் மகனுக்கும், தாய்க்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தாயுடன் உணவு தொடர்பாக காந்தி சண்டையிட்டுள்ளார்.
அதன் பின் ஆத்திரத்தில் அம்மி உரலை எடுத்து தாயின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் காந்தியின், தாயாரின் நிலையைப் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு தப்பி ஓடிய காந்தியை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.