இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க யூதர்கள் நட்சத்திரம் வழி காட்டியதாக சொல்லப்படுவதால் அனைவரது வீடுகளிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படுகின்றது. ஆனால் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் முறை முதன் முதலில் எந்த நாட்டில் எதற்காக யாரால் தொடங்கப்பட்டது என்று பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்துமஸ் மரத்தின் இலைகளுக்கு நடுவே சாண்டா கிளாஸ் என்று சொல்லப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு பொருட்களை வைத்து விட்டு செல்வார் என்பது நம்பிக்கை.

பொதுவாகவே கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது என்பது பாரம்பரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் மரத்தில் பல வண்ணங்களில் மணிகள், விளக்குகள் மற்றும் பந்துகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்கின்றனர். இந்த கிறிஸ்துமஸ் மரம் வைப்பதன் பழக்கத்தை சற்று பின்னோக்கி பார்த்தால் அவை மிக நீண்டது. தற்போதைய ஜெர்மனி பகுதிகளில் ஐரோப்பிய கலாச்சாரத்தில் ஒன்றான மறுமலர்ச்சி காலத்தில் இருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. பிராட்டஸ்டண்ட் கிறிஸ்துவ சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதர் என்பவர் முதன் முதலில் மரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து புதிய பழக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆரம்ப காலத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி கிறிஸ்துமஸ் மரங்களை வண்ணமயம் ஆக்கினர். அது மட்டுமல்லாமல் சாப்பிடும் பொருள்களான இஞ்சி ரொட்டி மற்றும் சாக்லேட் உட்பட இதனை இனிப்பு விஷயங்களையும் வைத்து கிறிஸ்மஸ் மரங்களை அலங்காரம் செய்தனர். கிறிஸ்துமஸ் மரத்தின் மீது காட்டப்படும் அலங்காரம் விருந்தினரை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தனித்துவமாக இதை உருவாக்குவதற்கு கிறிஸ்தவ மதத்தின் தொடக்கத்தில் இருந்தே பலரும் அலங்காரப் பணிகளை தொடங்கி விடுகின்றனர்