கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்துக்கள் எப்படி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகிறார்களோ அதனைப் போலவே கிறிஸ்துவ மக்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக கருதப்படும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். உலகில் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்றாக உள்ளது.

இந்தப் பண்டிகைக்கு பின்னால் சுமார் 2000 ஆண்டு பழமையான வரலாறு உள்ளது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாகவே அனைவரது வீடுகளிலும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும். இது எதற்காக கட்டப்படுகிறது என்பது குறித்து பலரும் அறியாமல் இருக்கலாம். அதாவது அரேபிய நாடான சிரியா நாட்டை சேர்ந்த வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அந்த புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்கவிடப்படுகிறது.

மார்ச் 25ஆம் தேதி மரியா இயேசுவை கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க கால கிறிஸ்துவரிடையே நிலவியது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கெட்டு டிசம்பர் 25ஆம் தேதி ஏசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவாக கொண்டாடுகின்றனர். துருக்கி நாட்டை சேர்ந்த செயின்ட் நிக்கோலஸ் என்ற பாதிரியார் தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகின்றது. இருந்தாலும் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை. இருந்தாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவதை சிறுவர்களை மகிழ்விக்கின்றது.