ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க யூதர்களுக்கு நட்சத்திரம் வழிகாட்டியதாக கூறப்படுகிறது. இதனாலேயே கிறிஸ்துமஸை முன்னிட்டு அனைவரின் வீடுகளிலும் நட்சத்திரங்கள் தொங்க விடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் முறை முதலில் எந்த நாட்டில் எதற்காக தொடங்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாது. இது குறித்து பார்ப்போம்.

கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்மஸ் மரத்தின் இலைகளுக்கு நடுவே தான் பரிசுப் பொருட்களை வைத்து செல்வார் என்பது நம்பிக்கை. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது பாரம்பரிய நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. அந்த மரத்தில் பல வண்ணங்களில் நட்சத்திரங்கள், பந்துகள், விளக்குகள் உள்ளிட்டவை மூலம் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். முதல் முதலில் ரோமானியர்களும், கிரேக்கர்களும் கிறிஸ்துமஸ் மரத்தை பண்டிகையின் போது வீடுகளில் வைத்து அலங்கரித்து பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

எப்போதும் வாடாமல் இருக்கும் மரங்களை வீடுகளில் வைத்து அலங்கரித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். எந்த காலத்திலும் வாடாமல் இருக்கும் மரங்களை அலங்கரிப்பதால் தீய சக்திகள் நோய்கள் எதுவும் நெருங்காமல் வீடுகளை பாதுகாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மேலும் ஆரோக்கிய மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் அடையாளமாக அந்த மரத்தை கருதியுள்ளனர். முதன் முதலில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் மரத்தை ஒரு அடையாளமாக வைத்துக் கொண்டாடிய நாடு ஜெர்மனி.

பிரமிடு போன்ற அமைப்பை உருவாக்கி பேப்பர்கள், ஆப்பிள்கள், விளக்குகள் போன்றவற்றை வைத்து மரத்தை அலங்கரித்துள்ளனர். தீமைகளை விளக்கி நன்மைகளை தருவதாக நம்பப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்மஸ் வரம் பிரபலமானது. 16- ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் என்பவர் கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கி அலங்கரிக்கும் பழக்கத்தை கிறிஸ்தவர்களிடைய அறிமுகம் செய்துள்ளார். அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் இயேசு கிறிஸ்துவை நினைவுபடுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதனை தேவாலயத்தில் இருப்பவர்களிடமும் தெரிவித்தார். காலப்போக்கில் இயேசு கிறிஸ்துவின் அடையாளமாக கிறிஸ்துமஸ் மரம் உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்களிடையே மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியது. கடந்த 1920-ஆம் ஆண்டு முதல் மின்சார விளக்குகளை பயன்படுத்தி கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் ஏற்பட்டது. முன்னதாக 1882-ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டுபிடித்த போது அவருடன் வேலை பார்த்த எட்வர்ட் ஜான்சன் என்பவர் தனது வீட்டிலிருந்து கிறிஸ்துமஸ் மரத்தை மின்சார விளக்குகளால் அலங்கரித்துள்ளார். அதனால் அவர் எலக்ட்ரிக் கிறிஸ்துமஸ் மரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.