இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டி படைத்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான ஒரு பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜனதா ஊரடங்கை அறிவித்தார். அதாவது ஜனதா ஊரடங்கு என்பது நாடு தழுவிய ஊரடங்கு ஆகும். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து விட்டு வெளியே செல்லக்கூடாது என பிரதமர் மோடி கூறினார். இதற்காக மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இது கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட முதல் நாடு தழுவிய ஊரடங்கு ஆகும்.

இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரக்கூடாது என கூறப்பட்டது. இந்நிலையில் ஜனதா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 3 வருடங்கள் ஆகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் பலரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்தது. மேலும் படிப்படியாக ஊரடங்குகளும் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.