ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  புரட்சின்னா  என்ன ? இருக்கின்ற நிலையை மாற்றி,  ஒரு புது  இருட்டின் நிலை மாற்ற… இப்ப இருக்கிறத மாற்றி ஒரு புரட்சி மனப்பான்மை. இப்போ என்ன இருக்கு ? ஜாதிகள் இருக்கின்றன, மதங்கள் இருக்கின்றன, ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன, கிராமங்கள் இருக்கின்றன, கிராமங்கள் இருக்கின்ற, நகரங்களில் இருக்கின்றன, பணக்காரர்கள் இருக்கிறார்கள்,  ஏழைகள் இருக்கிறார்கள், ஆனால் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருக்கிறதா ? இல்லை.

நாட்டிலே இருக்கக்கூடிய அனைவருக்கும் ஒரு சம வாய்ப்பு இருக்கிறதா ? இல்லை. உழைக்கின்றவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். அதனால்தான் புரட்சித்தலைவர் சாகுற வரையில ஆட்டோகிராப்பிலே என்ன கையெழுத்து போடுவாரு… கை ஆடும்..  ”உழைப்போரே உயர்ந்தவர்” வர்ணாஸ்ம தர்மத்திலே உழைப்போரை தாழ்ந்தவர். புரட்சித் தலைவர் கடைசி வரையில…  முடியாத போது  உழைப்போரே உயர்ந்தவர். ஆகையாலே… அனைவருக்கும் சமமும், சமத்துவமும், வாய்ப்பும்  ஏற்படுத்தும். அத்தகைய சமுதாயம் உருவாகவில்லை.

அதை உருவாக்கவும். அதான் அவர்களுடைய லட்சியம். இருக்கின்ற நிலையை மாற்றி சமுதாய, சமத்துவ, சம வாழ்வு, சம வாய்ப்பு, சமுதாயம்  உருவாகக்கூடிய ஒரு நிலையை கொண்டு வரணும். சில நாடுகளில் வந்து இருக்கிறது என்கிறார்கள்… டென்மார்க், ஸ்வீடன் எல்லாம் வந்திருக்கிறது என்கிறார்கள். பல நாடுகளில் நம்ம மாதிரி தான் இருக்கிறார்கள். ஏற்ற தாழ்வில் இருக்கின்றனர்.

யாரும் இந்த ஜாதியில் பிறந்ததினாலே வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த மதத்திலே சேர்ந்தவர்கள் என்பதினாலே என்னை புறக்கணித்து விட்டார்கள். நான் கிராமத்திலே இருந்ததால்  எனக்கு படிக்க வசதி இல்லாமல் போய்விட்டது. நான் ஏழை வீட்டில் பிறந்ததினாலே என்னால் மேல வர முடியல. இந்த வேறுபாடுகள் இல்லாத ஒரு சமுதாயம்.

கம்பர் ஒரு இடத்திலே ரொம்ப நல்லா சொல்லுகிறார்.  என்ன சொன்னார் அப்படின்னா….  ? அவர் சொல்ற நாட்டுல பணக்காரன்னு கிடையாது,   ஏழையும் கிடையாது. ஏன்னா எல்லாருக்கும் எல்லாம் கிடைக்குதாம்…  எப்போ  800 வருஷத்துக்கு 900 வருஷத்துக்கு முன்னால… நம்ம மண்ணிலே தோன்றிய புலவர் என்ன கனவு காண்கிறார் பாருங்கள்?  எல்லாரும் எல்லா பெருஞ்செல்வம் எய்ததாலே…  இல்லாரும் இல்லை,  உடையார்களும் இல்லை என்கிறார்.

ஏழையும் கிடையாது, பணக்காரனும்  கிடையாது. அது இன்னொன்னு சொல்றாரு….  படிச்சவனும் கிடையாது,  படிக்காதவனும்  கிடையாது. ஏன் ? எல்லாரும் படிச்சிருக்கான், இப்போ நம்ம எல்லாரும் பத்தாவது படிச்சிருக்கோம்….  எல்லோரும் பன்னிரண்டாவது படிச்சிருக்கோம்.. அப்படின்னா… இதுல படிச்சவன் யாரு ?  படிக்காதவன் யாரு? எல்லாருமே சமம். இப்படி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். அத்தகைய  சமுதாயத்தை உருவாகுவது தான் நம்முடைய கடமை. அதுதான் புரட்சி.

23ஆம் புலிகேசியை பார்த்து புரட்சி என்று சொல்லக்கூடாது. அவனை  ”புரட்சித் தமிழன்” சொன்னம்னா…  அது தப்பு. புலிகேசியை போல தான் ஒரு புரட்சியாளன் அப்படின்னா…  தமிழ் அப்படி சொல்லல. நம்முடைய இலக்கியம் அப்படி சொல்லல. முன்னோர்கள்  அப்படி சொல்லல.  பாரதிதாசன் எழுதுகிறார்….  இருக்கும் நிலை  மாற்ற, ஒரு புரட்சி மனப்பான்மை என எழுதுகின்றர்ன்.

இருக்கிற நிலையை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை உருவாக்குவது தான் புரட்சி. இதை எழுதியவரே புரட்சி கவிஞர். ஏன்னா புரட்சின்னா…  அர்த்தம் தெரியாம பல பேர் அலைகிறான். அதுக்காக தான் இந்த விளக்கம் சொன்னேன். ஆகையினாலே புரட்சி வேண்டும்,  தொண்டனும் வேண்டும்,  அவர்கள் நம்மவர்களாக வேண்டும். ஆகவே நமது புரட்சி தொண்டன் நாளேடு வாழ்க வாழ்க என்று வாழ்த்தி என் உரை முடிக்கிறேன் என தெரிவித்தார். அதிமுக மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சி தமிழன் என்ற பட்டம் வழங்கியது குறித்து அவர் மறைமுகமாக எடப்பாடியை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.