கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சூரை சேர்ந்த ஒரு மருத்துவ மாணவி பெங்களூரு செல்லும் ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் இன்னொரு இளைஞனும் பயணித்துள்ளார். இந்த நிலையில் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதிக்கு அருகே ரயில் வரும்போது, அந்த இளைஞர், மருத்துவ மாணவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனால் ரயில்வே நிர்வாகத்திடம் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் இப்ராஹிம் பாதுஷா(28) என தெரியவந்தது. மேலும் இவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.