இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், மிஸ்ரில் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நிஞ்ஜா டெக்னிக் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், தடுப்பூசி போடும் ஊழியர்கள் ஒரு நீண்ட குழாய் மூலம் ஊதுவதன் மூலம், தெருவில் உலவும் அல்லது அமர்ந்திருக்கும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது காட்டப்பட்டுள்ளது.

இந்த குழாயில் ஒரு ஊசி பொருத்தப்பட்டிருக்கிறது, இது ஊதும்போது நேரடியாக நாயின் உடலில் சென்று தடுப்பூசியை செலுத்துகிறது. இந்த முறையானது, ஊழியர்கள் நாய்களை நெருங்கி பிடிக்காமலும், தாக்கப்படும் அபாயம் இல்லாமலும் தடுப்பூசி போடுவதற்கு உதவுகிறது.

இந்தியாவில் ரேபிஸ் போன்ற ஆபத்தான நோய்களை பரப்பும் தெருநாய்களுக்கு இதுபோன்ற முறையை பயன்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த 17 வினாடிகள் கொண்ட வீடியோ எக்ஸ் கணக்கில் “தெருநாய்களுக்கு தடுப்பூசி போடும் ஒரு டெக்னிக்” என்ற தலைப்பில் பகிரப்பட்டு, 48 லட்சம் பார்வைகளை பெற்று, ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.