ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறி, சமீபத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் பெரும் போராட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

“இந்த மாஸ் குடியேற்றத்தை தடுக்க அரசியல்வாதிகளுக்கு தைரியம் இல்லை. இனி ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்து இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டும்” என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு குடியேற்றம் அதிகரிப்பது வேலை வாய்ப்பு மற்றும் சமூக வளங்களை பாதிக்கும் என்ற கருத்தும் அங்கு வலுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த போராட்டங்கள் நாட்டில் இனவெறி மற்றும் வெறுப்பை தூண்டும் முயற்சியாகும் என ஆஸ்திரேலிய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரின் ஒற்றுமையை குலைக்கக்கூடிய இத்தகைய செயல்கள் ஏற்க முடியாதவை என்றும், இந்தியர்கள் உட்பட குடியேற்ற மக்களின் பாதுகாப்பும் உரிமைகளும் உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடம் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.