உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் நடந்த ஒரு திருமணம், மணமகன் மாற்றப்பட்டது தெரியவந்ததால் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், டெல்லியில் பணிபுரியும் போது, தனது சகோதரிக்கு மணமகன் தேடுவதாகக் கூறியிருந்தார்.
அவரது அறிமுகமானவர், வாட்ஸ்அப்பில் ஒரு இளைஞரின் புகைப்படத்தை அனுப்பி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது.
திருமண நாளில், 30 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 7 பேர் மட்டுமே மாபிளை குழுவில் வந்தது சந்தேகத்தை எழுப்பியது. மணமகனைப் பார்த்த மணப்பெண்ணின் சகோதரர், அவர் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருந்தவரைப் போல் இல்லை எனக் கண்டறிந்தார்.
புகைப்படத்துடன் ஒப்பிட்டு, மணமகன் வேறு நபர் என்பது உறுதியானதும், திருமணம் ரத்து செய்யப்பட்டது. அதே இரவில், மணப்பெண் வேறொரு நபருடன் திருமணம் செய்துகொண்டார்.
