கூட்டணி வைத்தோம் என்பதற்காக பாஜக சொல்வதை ஒரு போதும் கேட்க மாட்டோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வில்லரசம்பட்டியில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி என்றும் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக எனவும் தெரிவித்தார்.

நாங்கள் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி திமுகவை பொருத்தவரை கொள்கை கோட்பாடு கிடையாது என்று தெரிவித்தார். பாஜகவின் பெயரை குறிப்பிடாமல் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும், கூட்டம் சேர்ந்து விட்டால் அவர்களின் கொள்கைகளை கேட்க வேண்டும் என்பது இல்லை என்று தெரிவித்தார்.