டி20 உலகக்கோப்பையில் இருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் இந்த முடிவை எடுக்க ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பிசிபி தலைவர் மோசின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் (Options) மேசையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது மிகப்பெரிய வருமானம் தரும் ஒரு ஆட்டம். இந்தப் போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணித்தால், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சுமார் 38 மில்லியன் டாலர் (சுமார் ₹315 கோடி) வரை இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
இதனால் பிசிபி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும், ஐசிசி (ICC) வழங்கும் நிதியில் கை வைக்கப்படலாம் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுடன் விளையாடாவிட்டால் வரும் பாதிப்புகளை உணர்ந்துள்ள பிசிபி, மற்றொரு பிளானையும் வைத்துள்ளது. போட்டியில் பங்கேற்று, வங்கதேசத்திற்கு ஆதரவாகவும் ஐசிசி-க்கு எதிராகவும் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை (Black Armbands) அணிந்து விளையாடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
