எகிப்து நாட்டில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் அரசு தலைவர்களும்,  ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி  போன்ற நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தற்போது பேசி வருகின்றனர்.இந்த ஒரு கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு பேச்சை பாலஸ்தீனத்தினுடைய அதிபர் வெஸ்ட் பேங்க்- இன் அதிகாரத்தில் இருக்கும் அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்து இருக்கிறார். நாங்கள் இந்த நிலத்தை விட்டு வெளியே போக மாட்டோம் என   குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.  எவ்வாறான சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன நிலத்திலேயே இருப்போம் என முகமது அப்பாஸ் தலைவர்கள் மத்தியில் பேசி உள்ளார். இந்த உரை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் மற்ற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் நிலைப்பாடு என்பது முக்கியமாக பார்க்க வேண்டியதாக  இருக்கிறது.

குறிப்பாக இத்தாலி மற்றும் கிரீஸ் தேசத்தை சேர்ந்த தலைவர்கள் இரண்டு நாடுகளுடைய இறையாண்மையும் அவசியம். இரண்டு நாடுகளுக்கும் எல்லைப்புறங்கள் உள்ளன. இரண்டு மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள். அரபு நாட்டுத் தலைவர்களை பொறுத்தவரை காசநகரத்தில் தற்போது ஏற்பட்டு வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நிவாரண உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். உணவு,  குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காசா நகரத்தினுடைய எல்லை பகுதிக்குள் எகிப்த் நாட்டின்  ரப்பா பார்டர் வழியாக  20 வாகனங்கள் முதற்கட்டமாக நிவாரண பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் ஒரு வாகனம் முழுக்க முழுக்க சவப்பெட்டிகளை மட்டும் சுமந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள்,  உணவு,  குடிநீர் போன்ற அனைத்து அனுப்பப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக  கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேருக்கு மேல் நிவாரண உதவிகள்,  மருந்து பொருட்கள் தேர்வை என வரையறுக்கப்பட்டுள்ளது.