இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 70% அவர்கள் குழந்தைகள் பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

எகிப்து நாட்டில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.  அதிபர் முகமது அப்பாஸை பொருத்தவரை மேற்கு கரை பகுதியினுடைய அதிகாரத்தில் இருக்கிறார். அதிகாரம் அற்ற  தலைவராகவே இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.  இப்போது போர் உச்சமாக நடைபெறுவது காசா பகுதியில் இஸ்ரேலுக்கும்- ஹமாசுக்கு இடையே தான் நேரடியாக போர் நடைபெற்று வருகிறது. எனவே முகமது அப்பாஸ் பேச்சு பாலஸ்தீனர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்படுத்தி இருக்கும்.

எங்கள் நிலம், எங்களுடைய உரிமை. எங்கள் நிலத்தை விட்டு நாங்கள் எங்கேயும் வெளியே போக மாட்டோம் என்ற கருத்தை அவர் ஆணித்தனமாக தெரிவித்து இருந்தாலும்,  இந்த கருத்து இஸ்ரேல் தரப்பில் பெரியளவுல மாற்றத்தை ஏற்படுத்தும். ஹமாஸ் தலைவர்களை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்கின்ற வார்த்தைக்கு இடமில்லை என இஸ்ரேல் கூறியிருக்கிறார்கள்.

210 பிணை கைதிகள் ஹமாஸிடம் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று அமெரிக்கன் இரண்டு பேரை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட னர். இந்நிலையில் இஸ்ரேலிய யூதர்கள், யூத சிறுவர்களும் இருப்பதாக இஸ்ரேல் ராணுவமே தெரிவித்துள்ளது. இந்த 210 பேரையும் முதற்கட்டமாக விடுவிக்க வேண்டும். ஹமாஸ் தலைவர்களுடைய ஆயுதப்படைகளை, ஆயுத கிடங்குகளை முடக்க வேண்டும் . அது வரை போர் நிறுத்தம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தெரிவித்து  வருகின்றது.