இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகிறது. 15வது நாளான இன்றை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ்  படைத்தளபதிகளில் முக்கியமானவரானதலால் அல் – ஹிண்டியை இஸ்ரேல் விமானப்படை காசா நகரத்தின் மையப்பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளதாக  தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாலஸ்தீன ஊடகங்களே இந்த தகவல்களை வெளியிட்டு உள்ளார்கள்.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த இந்த படை தளபதி.. குறிப்பாக இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் என கூறப்படுகிறது.  இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலுக்கு அனைத்து திட்டங்களும் வகுத்தவரும்,  ஆயுதங்களை கொண்டு சேர்த்தவருமாக கருதப்படும் தலால் அல் – ஹிண்டி, களத்தில் மிகத் திறம்பட செயல்படக் கூடியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முக்கிய தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருக்கும் கட்டிடங்கள்,  ஆயுதக்கிடங்குகள்,  சுரங்கப்பாதைகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  இதுவரை 6 தலைவர்களை கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த தாக்குதலில் தலால் அல் – ஹிண்டியின் மனைவி மகள் உட்பட உறவினர்களும் உயிரிழந்ததாக தகவல்.மத்திய காசாவில் உள்ள தலால் அல் – ஹிண்டியின் வீட்டை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.